வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு
கடந்த வருடம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஹசரங்கா அணியில் இடம்பெற்றுள்ளார்.;
கொழும்பு,
இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இலங்கை கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை வங்காளதேசம் கைப்பற்றியது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி சிலெட்டில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தனஞ்சயா டி சில்வா தலைமையிலான அந்த அணியில் கடந்த வருடம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹசரங்கா இடம்பெற்றுள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார்.
இலங்கை அணி விவரம் பின்வருமாறு:-
தனஞ்சயா டி சில்வா (கேப்டன்), குசல் மெண்டிஸ், கருணாரத்னே, நிஷன் மதுஷ்கா, மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், சதீரா சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், லஹிரு உதாரா, வனிந்து ஹசரங்கா, பிரபாத் ஜெயசூர்யா, ரமேஷ் மெண்டிஸ், நிஷன் பெய்ரிஸ், கசுன் ரஜிதா, விஷ்வா பெர்னண்டோ, லஹிரு குமாரா, சமிகா குனசேகரா.