பரபரப்பான சூழலில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா டெஸ்ட்
நியூசிலாந்து வெற்றி பெற தென் ஆப்பிரிக்கா 267 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
ஹாமில்டன்,
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 242 ரன்கள் அடித்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 211 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனையடுத்து 31 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 69.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 235 ரன்கள் அடித்தது. இதன் மூலம் நியூசிலாந்து வெற்றி பெற தென் ஆப்பிரிக்கா 267 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக பெடிங்காம் 110 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக வில்லியம் ஓ ரூர்க் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
267 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 3-வது நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் அடித்துள்ளது. டாம் லாதம் 21 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
நியூசிலாந்து வெற்றி பெற இன்னும் 227 ரன்கள் தேவைப்படும் நிலையில், தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 9 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இதனால் இந்த டெஸ்ட் போட்டி பரபரப்பான சூழலை எட்டியுள்ளது.
நாளை 4-வது ஆட்டம் நடைபெற உள்ளது.