டி20 உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மக்களவையில் பாராட்டு

டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Update: 2024-07-01 10:06 GMT

Image Courtesy: AFP 

புதுடெல்லி,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வந்த 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது.

இதையடுத்து கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் மக்களவை சார்பில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியை பாராட்டி இன்று வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

இன்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தின் போது சபாநாயகர் ஓம் பிர்லா டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியை பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தார். அப்போது அவர் கூறும்போது, இந்த வெற்றியில் இருந்து இந்தியாவின் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உத்வேகம் பெறுவார்கள் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்