டி20 உலகக்கோப்பை; இந்தியாவின் ஆடும் லெவனை தேர்வு செய்த ஹர்பஜன் சிங் - விக்கெட் கீப்பர் யார் தெரியுமா...?

இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-01 10:29 GMT

Image Courtesy: @BCCI

மும்பை,

20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் இந்த தொடருக்கான இந்திய அணியின் தனது ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார். அதன்படி அவர் தேர்வு செய்த அணியில் தொடக்க ஆட்டக்காரராக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து மிடில் ஆர்டரில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவும், விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனையும், ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து பந்துவீச்சாளர்களாக யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார்.

ஹர்பஜன் சிங் தேர்வு செய்த இந்தியாவின் பிளேயிங் லெவன்:

ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

Tags:    

மேலும் செய்திகள்