டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் ரிஷப் பண்ட், அக்சர் படேல் இடம்பெற வேண்டும்- கங்குலி
டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது;
புதுடெல்லி,
9-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.இந்த தொடருக்கான இந்திய அணியில் நடப்பு ஐ.பி.எல். சீசனில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஐ.பி.எல் .தொடரில் டெல்லி அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட், அக்சர் படேல் இருவரும் டி20 உலகக்கோப்பைகான இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என டெல்லி அணியின் கிரிக்கெட் இயக்குனரும்,இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக கங்குலி கூறியதாவது,
என்னை பொறுத்தவரைக்கும் ரிஷப் பண்ட், அக்சர் படேல் என இருவரும் டி20- உலகக்கோப்பைக்கான இந்தியா அணியில் நிச்சயமாக இடம்பெற வேண்டும். டி20 போட்டியில் ரோகித் சர்மா, யாராவது ஒருவர் 8-வது இடத்தில் களம் இறங்கி 15 முதல் 20 ரன்கள் அடிக்க வேண்டும் என நினைத்தால், அந்த பணியை அக்சர் பட்டேல் செய்வார். இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.