பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்; காயம் காரணமாக விலகும் நியூசிலாந்து வீரர்...!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.

Update: 2024-01-13 05:31 GMT

Image Courtesy: AFP

வெல்லிங்டன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றிருந்த அறிமுக வீரர் ஜோஷ் கிளார்க்சன் காயம் காரணமாக விலகி உள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக வில் யங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 போட்டிக்கு மட்டும் கேன் வில்லியம்சனுக்கு பதிலாக நியூசிலாந்து அணியில் ஜோஷ் கிளார்க்சன் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்