டி20 தரவரிசை: சூர்யகுமார் யாதவை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறிய ஆஸ்திரேலிய வீரர்

டி20 தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ,சி.சி) வெளியிட்டுள்ளது.

Update: 2024-06-26 11:51 GMT

கோப்புப்படம்

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வீரர்களுக்கான டி20 தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இதுவரை முதல் இடத்தில் இருந்த இந்திய வீரர் சூர்யகுமார் யாதவை (842 புள்ளி) பின்னுக்கு தள்ளி, ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் (844 புள்ளி) முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார். சூர்யகுமார் யாதவ் 2வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

இதையடுத்து 3வது இடத்தில் பில் சால்ட் (816 புள்ளி), 4வது இடத்தில் பாபர் அசாம் (755 புள்ளி), 5வது இடத்தில் முகமது ரிஸ்வான் (746 புள்ளி) உள்ளனர். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அடில் ரஷித் (719 புள்ளி) முதல் இடத்திலும், ரஷித் கான் (681 புள்ளி) 2வது இடத்திலும் (2 இடம் உயர்ந்து), வனிந்து ஹசரங்கா (674 புள்ளி) 3வது இடத்திலும் உள்ளனர்.

இந்தியா தரப்பில் அக்சர் படேல் (647 புள்ளி) 8வது இடத்திலும், குல்தீப் யாதவ் (641 புள்ளி) 11வது இடத்திலும் உள்ளனர். ஆல் ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் வனிந்து ஹசரங்கா (222 புள்ளி) முதல் இடத்திலும், முகமது நபி (214 புள்ளி) 2வது இடத்திலும், ஹர்திக் பாண்ட்யா (213 புள்ளி) 3வது இடத்திலும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்