டி20 கிரிக்கெட்; இந்தியா - வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது.
குவாலியர்,
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்று தொடங்குகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் பும்ரா, சிராஜ், பண்ட், கில், ஜெய்ஸ்வால், ருதுராஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி குவாலியரில் இன்று நடக்கிறது.
டெஸ்ட் தொடரை இழந்த வங்காளதேச அணி டி20 தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. அதேவேளையில் இந்திய அணி வெற்றிப்பயணத்தை நீட்டிகும் முனைப்பில் உள்ளது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.