சூப்பர் 8 சுற்று: வெற்றியுடன் தொடங்க போகும் முதல் அணி எது..? தென் ஆப்பிரிக்கா - அமெரிக்கா நாளை மோதல்

சூப்பர் 8 சுற்றின் முதலாவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - அமெரிக்கா அணிகள் நாளை மோதுகின்றன.

Update: 2024-06-18 15:45 GMT

ஆண்டிகுவா,

9-வது டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு தகுதி பெறும். லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் (இந்திய நேரப்படி) முடிவுக்கு வந்தன.

லீக் சுற்றின் முடிவில் இந்தியா, அமெரிக்கா, வங்காளதேசம், தென் ஆப்பிரிக்க்கா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

சூப்பர் 8 சுற்றில் இந்த அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப் 1 பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகளும், குரூப் 2 பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. சூப்பர் 8 சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற உள்ளன.

சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நாளை ஆரம்பமாக உள்ளன. இதன் முதலாவது ஆட்டத்தில் குரூப் 2-ல் இடம்பெற்றுள்ள அமெரிக்கா - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீசை நடத்த உள்ளன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆண்டிகுவா நகரில் நடைபெற உள்ளது.

சூப்பர் 8 சுற்றின் முதல் ஆட்டம் இது என்பதால் வெற்றியுடன் தொடங்க போகும் அணி எது? என்பது குறித்த ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்