இந்திய அணிக்கு கேப்டனாகும் ஷிகர் தவான்? - பிசிசிஐ-யின் அடுத்தகட்ட நகர்வு
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் இடம்பெற்றுள்ளது.
மும்பை,
சீனாவில்19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கி அக்டோபர் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் இடம்பெற்றுள்ளது.
இதில பங்கேற்க ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி சீனா செல்ல உள்ளது. உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி தயாராகும் நிலையில் இரண்டாம் பட்ச வீரர்களை ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அனுப்ப பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணியை விவிஎஸ் லக்ஷ்மணனை வழிநடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி முயற்சித்து வரும் நிலையில், அதற்கான முன்னோட்டமாக ஆசிய விளையாட்டு போட்டிபார்க்கப்படுகிறது.