அதிரடியில் மிரள வைத்த ஷர்துல் தாக்கூர்...! கொல்கத்தா அணி 204 ரன்கள் குவிப்பு

தொடர்ந்து 205ரன்கள் இலக்குடன் பெங்களூரு விளையாடுகிறது.

Update: 2023-04-06 15:49 GMT

கொல்கத்தா,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற அணி பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் , ரஹ்மத்துல்லா குர்பாஸ் களமிறங்கினர். தொடக்கத்தில் டேவிட் வில்லே பந்துவீச்சில் வெங்கடேஷ் ஐயர், மந்தீப் சிங் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் கேப்டன் நிதிஸ் ராணா 1 ரன்களில் வெளியேறினார்.

மறுமுனையில் ரஹ்மத்துல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடினார் . பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு விரட்டிய அவர் அரைசதம் அடித்தார். தொடர்ந்து ஆடிய அவர் 57 ரன்களில் கரண் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ரசல் ரன் எதுவும் எடுக்காமல் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அடித்து இணைந்த ரிங்கு சிங் மற்றும் ஷர்துல் தாக்கூர் சிறப்பாகவிளையாடினர். குறிப்பாக ஷர்துல் தாக்கூர் பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 20 பந்துகளில் அரைசதம் அடித்தார்.மறுபுறம் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 46 ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7விக்கெட் இழப்பிற்கு 204ரன்கள் எடுத்தது. ஷர்துல் தாக்கூர் 29 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.. தொடர்ந்து ரன்கள் இலக்குடன் பெங்களூரு விளையாடுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்