சச்சின், விராட் இல்லை... அவர்தான் இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் - ரெய்னா கருத்து

இங்கிலாந்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டுள்ள லெஜெண்ட்ஸ் டி20 கிரிக்கெட் லீக் நடைபெற்று வருகிறது.

Update: 2024-07-12 08:13 GMT

Image Courtesy: @BCCI / @JayShah

பர்மிங்ஹாம்,

இங்கிலாந்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டுள்ள லெஜெண்ட்ஸ் டி20 கிரிக்கெட் லீக் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளின் முன்னாள் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இந்த தொடரில் விளையாடி வரும் சுரேஷ் ரெய்னாவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சுரேஷ் ரெய்னா சில ஆச்சரியமான பதில்களை கூறியுள்ளார்.

சுரேஷ் ரெய்னாவிடம் முதல் கேள்வியாக டெத் ஓவர்களில் சிறந்த பவுலர் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பும்ரா என பதில் கூறினார். அடுத்து தொடர்ந்து சிறப்பாக விளையாடும் வீரர் யார் என்ற கேள்விக்கு மைக்கேல் ஹசி என்று கூறினார்.

இதையடுத்து வேடிக்கையான கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்விக்கு, ஹர்பஜன் சிங் என பதில் கூறினார். அடுத்து ரன் மெஷின் யார் என்ற கேள்விக்கு விராட் கோலியை தேர்ந்தெடுத்தார். தொடர்ந்து எல்லா காலத்திலும் சிறந்த வீரர் யார் என்ற கேள்விக்கு மகேந்திர சிங் தோனி என பதிலளித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்