சிட்னி மைதானத்தில் சச்சின்-லாரா பெயரில் "கேட்" - இரு பெரும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் கவுரவிப்பு

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் சச்சின் மற்றும் லாராவின் பெயரில் கேட் திறக்கப்பட்டு உள்ளது.;

Update:2023-04-24 21:00 IST

சிட்னி,

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இன்று தன்னுடைய 50-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் சச்சின் மற்றும் லாராவின் பெயரில் கேட் திறக்கப்பட்டு உள்ளது.

இரு பெரும் ஜாம்பவான்களான சச்சின் மற்றும் லாரவைப் பெருமைப்படுத்தும் விதமாக சச்சின்-லாரா கேட் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் டெஸ்ட் சதத்தை சிட்னி மைதானத்தில் சச்சின் அடித்ததும், வெளிநாட்டு மைதானங்களில் தனக்கு அபிமானமான மைதானம் சிட்னி என சச்சின் முன்பு கூறியிருந்ததும் நினைவுகூரத்தக்கது.Full View

Tags:    

மேலும் செய்திகள்