அதிரடியில் மிரட்டிய ருதுராஜ் கெய்க்வாட் , மிட்செல்...சென்னை அணி 212 ரன்கள் குவிப்பு

சிறப்பாக ஆடிய ருதுராஜ் 54 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Update: 2024-04-28 15:57 GMT

சென்னை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல்கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில், டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்க வீரர்களாக ரகானே , ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் ரகானே 8 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து டேரில் மிட்செல் களமிறங்கினார். ருதுராஜ் கெய்க்வாட் , மிட்செல் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். தொடர்ந்து சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். பின்னர் மிட்செல் 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து ஷிவம் துபே களமிறங்கினார்.

அரைசதம் கடந்த பிறகு ருதுராஜ் கெயிக்வாட் , சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை சிதறடித்தார்.மறுபுறம் துபே சிக்சர்களை பறக்க விட்டார்.சிறப்பாக ஆடிய ருதுராஜ் 54 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 213 ரன்கள் இலக்குடன் ஐதராபாத் அணி விளையாடுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்