ரஞ்சி டிராபி; தமிழ்நாடு உட்பட காலிறுதிக்கு தகுதிபெற்ற 8 அணிகள்...போட்டி அட்டவணை வெளியிட்ட பி.சி.சி.ஐ

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பவ்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

Update: 2024-02-20 14:43 GMT

Image Courtesy: @BCCIdomestic

புதுடெல்லி,

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பவ்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. இந்நிலையில் இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன.

இந்த லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் கர்நாடகா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, சவுராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரா ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. இந்நிலையில் காலிறுதி ஆட்டங்களுக்கான போட்டி அட்டவணையை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது.

அதன் படி காலிறுதி ஆட்டங்கள் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. இதில் முதலாவது காலிறுதி ஆட்டத்தில் விதர்பா- கர்நாடகா அணிகள் மோதுகின்றன. இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் மும்பை - பரோடா அணிகளும், மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு - சவுராஷ்டிரா அணிகளும், நான்காவது காலிறுதி ஆட்டத்தில் மத்திய பிரதேசம் - ஆந்திரா அணிகளும் மோத இருக்கின்றன.


Tags:    

மேலும் செய்திகள்