ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டி: சவுராஷ்டிரா அணி 404 ரன்கள் குவிப்பு

பெங்கால் அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணி 404 ரன்கள் குவித்துள்ளது.

Update: 2023-02-18 19:47 GMT

கொல்கத்தா,

பெங்கால்-சவுராஷ்டிரா அணிகள் இடையிலான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 174 ரன்னில் சுருண்டது.

இதனை அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 317 ரன்கள் எடுத்து இருந்தது. 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய சவுராஷ்டிரா அணி 404 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. பெங்கால் தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப், இஷான் போரெல் தலா 3 விக்கெட்டும் சாய்த்தனர்.

பின்னர் 230 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 4 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. அனுஸ்டப் மஜூம்தார் 61 ரன்னில் அவுட் ஆனார். கேப்டன் மனோஜ் திவாரி 57 ரன்னுடனும், ஷபாஸ் அகமது 13 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்