ரோகித் சர்மா அருமையான தலைவன் - ராகுல் டிராவிட் புகழாரம்

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்தது.;

Update:2023-11-20 01:19 IST

அகமதாபாத்,

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா நேற்று மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6வது முறையாக உலகக்கோப்பையை வென்றது.

இதனிடையே, இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி மீது பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேவேளை, இந்திய அணிக்கு ஆதரவு குரல்களும் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறித்து அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிராவிட் கூறுகையில், ' ரோகித் சர்மா அருமையான தலைவன். அவர் அணியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். சிறந்த முன் உதாரணமாக இருக்க வேண்டும் என ரோகித் எண்ணினார். அதையே அவர் செய்தார். ரோகித் சர்மா மிகச்சிறந்த தலைவன் ' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்