ஆஸ்திரேலிய அணிக்கு உலகக்கோப்பை வழங்கிய பிரதமர் மோடி
இந்திய அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது.
அகமதாபாத்,
உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா நேற்று மோதின. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடந்த இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6வது முறையாக உலகக்கோப்பையை வென்றது.
இதனிடையே, உலகக்கோப்பை இறுதிப்போட்டியை இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்டு மார்லெஸ் ஆகியோர் நேரில் கண்டுகளித்தனர்.
இந்நிலையில், இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணிக்கு உலகக்கோப்பையை பிரதமர் மோடி வழங்கினார்.
இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்டு ஆகியோர் உலகக்கோப்பையை வழங்க அதை ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பெற்றுக்கொண்டார்.