பாண்ட்யாவால் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பி வர முடியாது.. ஏனெனில்.. - இந்திய முன்னாள் வீரர்

ஹர்திக் பாண்ட்யா 2018-ம் ஆண்டுக்கு பின் டெஸ்ட் போட்டியில் களமிறங்கவில்லை.

Update: 2024-09-27 14:04 GMT

image courtesy: AFP

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 86 ஒருநாள் போட்டிகள், 102 டி20 போட்டிகள் மற்றும் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதிரடியான பேட்ஸ்மேனாக திகழும் பாண்ட்யா வேகப்பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்படக்கூடியர் என்பதனால் நட்சத்திர ஆல்ரவுண்டராக இந்திய அணியில் முக்கிய வீரராக இடம் பிடித்து விளையாடுகிறார்.

ஆனாலும் அடிக்கடி காயத்தை சந்திப்பதால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2018-ம் ஆண்டிற்கு பிறகு இதுவரை விளையாடவில்லை. இதனிடையே சமீப காலமாகவே ரெட் பாலில் அவர் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருவதால் அவர் மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்புகிறாரோ என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் கூறுகையில், "ஹர்திக் பாண்ட்யாவின் உடற்தகுதி பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவரால் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் நிச்சயமாக திரும்பி வர முடியாது. ஒருவேளை தனது உடற்தகுதியை அவர் முன்னேற்றிக் கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் வந்தால் அதை நான் ஆச்சரியமாக பார்ப்பேன்.

என்னை பொறுத்தவரை ஹர்திக் பாண்ட்யாவால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட முடியாது. இருப்பினும் அவரைப் போன்ற ஒரு ஆல்ரவுண்டர் இந்திய டெஸ்ட் அணியில் இருந்தால் நிச்சயம் அது இந்திய அணிக்கு சாதகம்தான். என்னை பொறுத்தவரை தற்போது ஷர்துல் தாகூர், நித்திஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே ஆகியோருக்கு அந்த தகுதி உள்ளது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்