பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் - இன்று நடக்கிறது
ஆப்கானிஸ்தான் அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
சார்ஜா,
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் முதலாவது போட்டி சார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 9 விக்கெட்டுக்கு 92 ரன்னில் சுருண்டது. அடுத்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, 17.5 ஓவர்களில் 98 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
20 ஓவர் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானை வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இதே மைதானத்தில் இன்று இரவு 9.30 மணிக்கு நடக்கிறது.