டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறிய ஓமன்

ஓமன் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை வரும் 13ம் தேதி எதிர்கொள்கிறது.

Update: 2024-06-10 05:23 GMT

Image Courtesy: AFP

ஆண்டிகுவா,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய நேரப்படி நேற்று இரவு 10.30 மணிக்கு நடைபெற்ற 20வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - ஓமன் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஓமன் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது. ஓமன் தரப்பில் அதிகபட்சமாக பிரதிக் அதவலே 54 ரன்கள் எடுத்தார். ஸ்காட்லாந்து தரப்பில் சப்யான் ஷெரீப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 151 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஸ்காட்லாந்து அணி 13.1 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 153 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்து தரப்பில் அதிகபட்சமாக பிராண்டன் மெக்முல்லன் 61 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஸ்காட்லாந்து அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது. அதேவேளையில் 3 ஆட்டங்களில் ஆடி அனைத்திலும் தோல்வி கண்டுள்ள ஓமன் நடப்பு உலகக்கோப்பை தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது. ஓமன் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை வரும் 13ம் தேதி எதிர்கொள்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்