பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்; ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-10-14 09:58 GMT

image courtesy; ICC

மெல்போர்ன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.

இந்த தொடர் அடுத்த மாதம் 4ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அணியில் டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ச் ஆகியோர் இடம் பெறவில்லை. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்;

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அப்போட், கூப்பர் கன்னோலி, ஜேக் ப்ரேசர் மெக்குர்க், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லபுஸ்சாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா.


Tags:    

மேலும் செய்திகள்