அந்த அம்சத்தில் விராட் கோலி உட்பட யாரும் அவரை விட சிறந்தவர் கிடையாது - கபில் தேவ் பாராட்டு

பொதுவாகவே ஆக்ரோஷமாக கொண்டாடக்கூடிய விராட் கோலி எளிதாக 150 - 250 கிலோ தூக்கி பிட்டாக இருப்பதால் நன்றாக விளையாடுவதாக கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-27 10:31 GMT

மும்பை,

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது என்பதை நிர்ணயிக்கும் ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

இதில் இந்திய அணி இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றிருப்பதால், அரையிறுதியில் கூடுதல் நம்பிக்கையுடன் களமிறங்க உள்ளது.

முன்னதாக இந்த தொடரில் முதல் முறையாக தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி பெரிய அளவில் ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறார். இதற்கு அவர் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வருவதே காரணம் என்று பலர் குறை கூறி வருகின்றனர்.

அதேவேளை மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ரோகித் சர்மா அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே அரை சதமடித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். அதற்கடுத்த போட்டிகளில் கொஞ்சம் தடுமாற்றமாக செயல்பட்ட அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிரடியாக விளையாடி 92 ரன்கள் குவித்தார்.

இந்நிலையில் பொதுவாகவே ஆக்ரோஷமாக கொண்டாடக்கூடிய விராட் கோலி எளிதாக 150 - 250 கிலோ தூக்கி பிட்டாக இருப்பதால் நன்றாக விளையாடுவதாக கபில்தேவ் தெரிவித்துள்ளார். ஆனால் தன்னுடைய வரம்புகளை அறிந்து செயல்படுவதில் விராட் கோலியை விட ரோகித் சர்மா சிறந்தவர் என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார். அதனால் 1 பேக்கை வைத்துக்கொண்டே ரோகித் சர்மா அசால்டாக பெரிய சிக்சர்களை அடிப்பதாகவும் கபில் தேவ் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலி 150 கிலோ முதல் 250 கிலோ பளுவை தூக்கினால் அதை ரோகித் சர்மாவும் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. ரோகித் சர்மா தன்னுடைய ஆட்டத்தை நன்றாக தெரிந்து வைத்துள்ளதாக தெரிகிறது. அவர் தனக்குள்ளேயே விளையாடுகிறார். அவர் விராட் கோலியை போல உயரே துள்ளி குதித்து அங்கேயும் இங்கேயும் ஓடுவதில்லை.

ரோகித் சர்மா தன்னுடைய வரம்புகளைப் பற்றி விழிப்புணர்வுடன் இருக்கிறார். அந்த அம்சத்தில் விராட் கோலி உட்பட யாரும் அவரை விட சிறந்தவர் கிடையாது. ரோகித் சர்மா பெரிய சிக்சர்களை அடிக்க ஒரு பேக் போதுமானது. இங்கே பல பெரிய வீரர்கள் வந்து தங்களை வைத்தே கேப்டன்ஷிப்பும் செய்துள்ளனர். ஆனால் அவர்களை விட ரோகித் சர்மா ஒரு எக்ஸ்ட்ரா கட்டத்தை நிரப்புகிறார். ஏனெனில் அவர் மொத்த இந்திய அணியையும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்