நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: 4-வது நாள் ஆட்டமும் ரத்து.. ரசிகர்கள் ஏமாற்றம்

நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.;

Update: 2024-09-12 11:37 GMT

கிரேட்டர் நொய்டா,

நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கடந்த 9-ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் முதல் நாள் ஆட்டம் ரத்தானது. மைதானத்தில் வடிகால் வசதி சரியாக இல்லாததால் தேங்கிய தண்ணீரை சீக்கிரம் வெளியேற்ற முடியவில்லை.

இதனையடுத்து 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டமும் தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலையில் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மைதான ஊழியர்கள் போராடி 3-வது நாளான நேற்று தண்ணீரை வெளியேற்றினர். இதனால் 4-வது நாளான இன்று போட்டி தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் கிரேட்டர் நொய்டாவில் இன்று மழை பெய்ய தொடங்கியது. இதனால் இன்றும் (4-வது நாள் ஆட்டம்) போட்டி தொடங்க முடியாத சூழலில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும். இருப்பினும் இந்த போட்டியின் 4 நாள் ஆட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்