கமல்ஹாசனின் 'தக் லைப்' படத்தின் புதிய அப்டேட்

'தக் லைப்' படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது;

Update:2024-04-24 20:20 IST
கமல்ஹாசனின்  தக் லைப் படத்தின் புதிய அப்டேட்

சென்னை,

"கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது. 'தக் லைப்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தைரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் கமல் 3 வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைபெற்றது

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 'தக் லைப்' படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் , திரிஷா, அரவிந்த்சாமி, ஐஸ்வர்யா லட்சுமி பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்