இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய மேத்யூ மோட்

இங்கிலாந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து மேத்யூ மோட் விலகினார்.

Update: 2024-07-30 12:25 GMT

image courtesy: @ICC

லண்டன்,

இங்கிலாந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேத்யூ மோட் அப்பதவியிலிருந்து விலகியதாக இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளராக 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட மேத்யூ மோட் ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்னரே தற்போது தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகி உள்ளார். இவரது பயிற்சியின் கீழ் 2022 டி20 உலகக்கோப்பைய வென்ற இங்கிலாந்து அணி, 2023 ஒருநாள் உலகக்கோப்பை, 2024 டி20 உலகக்கோப்பையில் தோல்வியை தழுவியது.

இதன் காரணமாக அவர் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேத்யூ மோட் பதவி விலகியதை அடுத்து இங்கிலாந்து அணியின் உதவி பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மார்கஸ் ட்ரெஸ்கோதிக் இடைக்கால தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.




Tags:    

மேலும் செய்திகள்