மதுரை அணி அபார பந்துவீச்சு.! 98 ரன்களில் சுருண்ட சேலம் ஸ்பார்டன்ஸ்
99 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி பேட்டிங் செய்துவருகிறது.
சேலம்,
8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் அடுத்தக்கட்ட ஆட்டங்கள் சேலம் வாழப்பாடியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்று வருகிறது. இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.
பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கிய 13-வது லீக்கில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவதாக நடக்கும் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதி வருகிறது..
இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சாத்விக் 17 ரன்கள் எடுத்தார்.
மதுரை அணியின் அபார பந்துவீச்சால் சேலம் அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை இழந்து நடையை கட்டினர். ஆகாஷ்(0), கௌசிக் காந்தி(3), மான் பாப்னா(1), அபிஷேக்(0), அடுத்தடுத்து அவுட்டானதால் சேலம் அணி ரன் குவிக்க தடுமாறியது.
அணியில் அதிகபட்சமாக கேப்டன் அபிஷேக் தன்வர் 29 ரன்கள் எடுத்தர். இறுதியில் சேலம் அணி 19.4 ஓவர்களில் 98 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. மதுரை தரப்பில் அதிகபட்சமாக குர்ஜப்னீத் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து 99 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி பேட்டிங் செய்துவருகிறது.