கடைசி டி20: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை

ஒருநாள் தொடரையும் இலங்கை அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Update: 2024-01-19 02:00 GMT

கொழும்பு,

ஜிம்பாப்வே அணி- இலங்கை அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதலே தடுமாறியது. 1 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்த ஜிம்பாப்வே அணி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து. 34 ரன்கள் வரை அடுத்த விக்கெட்டை இழக்காமல் விளையாடிய அந்த அணி 35 ரன்களுக்கு 2-வது விக்கெட்டை இழந்தது.

அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியில் அந்த அணி அணி 14.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரையன் பென்னட் 29 ரன்கள் அடித்தார். இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 4 விக்கெட்டுகளையும் மேத்யூஸ், தீக்ஷனா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இதனையடுத்து எளிதான இலக்கை நோக்கி இலங்கை அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக நிசங்கா- குசல் மெண்டிஸ் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் குவித்தது. குசல் மெண்டீஸ் 33 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் இலங்கை அணி 10.5 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 88 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இலங்கை அணி கைப்பற்றியது. முன்னதாக நடந்த ஒருநாள் தொடரையும் இலங்கை அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்