கடைசி டி20 போட்டி; பாபர் அசாம் அரைசதம்...பாகிஸ்தான் 178 ரன்கள் குவிப்பு

பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக பாபர் அசாம் 69 ரன் எடுத்தார்.

Update: 2024-04-27 16:38 GMT

Image Courtesy: AFP 

லாகூர்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் 4 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் 2-1 என நியூசிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்தானது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் பாகிஸ்தான் அணி ஆட உள்ளது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக சைம் அயூப் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அயூப் 1 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய உஸ்மான் கான் 31 ரன், பக்கார் ஜமான் 43 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய பாபர் அசாம் அரைசதம் அடித்தார்.

அவர் 69 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக பாபர் அசாம் 69 ரன் எடுத்தார். இதையடுத்து 179 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து ஆடி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்