இந்திய அணியில் இடம் பெறுவதற்கான பட்டியலில் ஐயர், கிஷன் எப்போதும் இருக்கிறார்கள் - டிராவிட்

பி.சி.சி.ஐ.யின் மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் நீக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-03-10 11:07 GMT

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் (பி.சி.சி.ஐ.) சார்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட வருடாந்திர வீரர்களின் மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து முன்னணி பேட்ஸ்மேன்களான ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இருந்தது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது.

அதோடு அவர்கள் குறித்த விவாதமும் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. ஐயர், இஷான் கிஷன் இருவருமே ரஞ்சி டிராபியில் விளையாட மறுத்த காரணத்தினாலே பி.சி.சி.ஐ. அவர்கள் மீது இந்த அதிரடியான நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்பட்டது. மேலும் முதல்தர கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் பி.சி.சி.ஐ. எடுத்த இந்த நடவடிக்கை சரியான ஒன்றுதான் என்றும் முன்னாள் வீரர்கள் பலரும் கூறியிருந்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் பி.சி.சி.ஐ. ஒப்பந்தத்தை, தான் முடிவு செய்யவில்லை என்று தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : -

'இந்திய அணியில் இடம் பெறுவதற்கான பட்டியலில் அவர்கள் (ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன்) எப்போதும் இருக்கிறார்கள். ஆனால் வீரர்களின் ஒப்பந்தம் என்பது குறித்த முடிவினை நான் எடுப்பதில்லை. தேர்வுக்குழுவினரும், இந்திய கிரிக்கெட் வாரியமும்தான் வீரர்களின் ஒப்பந்தத்தில் யார்? யார்? இடம் பெற வேண்டும் என்று முடிவு செய்கின்றனர்.

உண்மையை சொல்ல வேண்டுமெனில் எப்படி ஒப்பந்தத்தில் வீரர்கள் இடம் பிடிக்க தகுதியானவர்கள் என்கிற அளவுகோல் கூட எனக்கு தெரியாது. நானும் ரோகித்தும் போட்டியில் விளையாட கூடிய 11 வீரர்களை மட்டுமே தேர்வு செய்வோம். மற்றபடி வீரர்களுக்கு ஒப்பந்தம் உள்ளதா? இல்லையா? அவர்கள் ஒப்பந்த பட்டியலில் தேர்வு செய்யப்படுவார்களா? இல்லையா? என்பது குறித்து எல்லாம் ஆலோசித்தது கிடையாது' என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்