ஓப்பனிங்கில் கிடைத்த நல்ல தொடக்கத்தை பயன்படுத்துவது மிகவும் முக்கியம் - வெங்கடேஷ் ஐயர்

ஐ.பி.எல் தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 10வது லீக் ஆட்டத்தில் ஆர்.பி.சி - கே.கே. ஆர் அணிகள் மோதின.

Update: 2024-03-30 01:35 GMT

Image Courtesy: AFP

பெங்களூரு,

ஐ.பி.எல் தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 10வது லீக் ஆட்டத்தில் ஆர்.பி.சி - கே.கே. ஆர் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நரைன், பில் சால்ட், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அதிரடியின் மூலம் 16.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டை மட்டும் இழந்து 186 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் ஐயர் அளித்த பேட்டியில் கூறியதாவது, உண்மையை சொல்ல வேண்டுமெனில் போட்டி நடைபெற நடைபெற அது நன்றாக மாறியது. குறிப்பாக பெவிலியன் பக்கம் நன்றாக மாறியது. சுனில் நரேனுக்கு பாராட்டுக்கள். அவர் விளையாடியதால் ஆரம்பத்திலேயே அழுத்தம் குறைந்தது. எனவே கடைசியில் நாங்கள் சம்பிரதாயங்களை முடித்தோம்.

ஓப்பனிங்கில் கிடைத்த நல்ல தொடக்கத்தை பயன்படுத்துவது மிகவும் முக்கியம். எதிரணி இடது கை ஸ்பின்னரை பயன்படுத்தும் போது அதை அதிரடியாக எதிர்கொள்வது என்னுடைய கடமை. இங்கே என்னுடைய வருங்கால மனைவியும் உள்ளார். என் ஆட்டத்திற்கான பாராட்டுக்களை அவருக்கும் நான் கொடுக்க விரும்புகிறேன்.

விஜயகுமார் நன்றாக பந்து வீசினார். அவரை எதிர்கொள்வது மட்டும் கொஞ்சம் கடினமாக இருந்தது. பிட்ச்சில் வேகத்தை குறைத்து வீசும் போது எதிர்கொள்வது கடினமாக இருந்தது. நாங்களும் வேகமாக பந்து வீசும் போது கடினமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்