அவர்கள் துலீப் கோப்பையில் விளையாடாதது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல - முன்னாள் வீரர்

விராட் மற்றும் ரோகித் ஆகியோருக்கு மட்டும் பிசிசிஐ சலுகைகளை வழங்குவதாக மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-26 04:51 GMT

மும்பை,

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் அந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தடுமாற்றமாக விளையாடி ஆட்டமிழந்தனர். அதற்கு துலீப் கோப்பையில் விளையாடாமல் நேரடியாக களமிறங்கியதே காரணம் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் சமீபத்தில் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் அனைத்து வீரர்களையும் சமமாக நடத்தாமல் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு மட்டும் சலுகைகளை வழங்கும் பிசிசிஐ இந்திய கிரிக்கெட்டில் உள்ள மற்ற வீரர்களை காயப்படுத்துவதாக மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-"நான் கவலைப்படவில்லை. ஆனால் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியிருந்தால் வங்காளதேச தொடரில் அவர்கள் சிறப்பாக இருந்திருப்பார்கள் என்ற உண்மையைப் பற்றி யாரோ ஒரு குறிப்பை செய்திருந்தார்கள் என்று நம்புகிறேன். துலீப் கோப்பையில் அவர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்தது. குறிப்பிட்ட சில வீரர்களை வித்தியாசமாக நடத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். துலீப் கோப்பையில் விராட் மற்றும் ரோகித் விளையாடாதது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. அந்த 2 வீரர்களுக்கும் நல்லதல்ல. அவர்கள் அங்கே விளையாடியிருந்தால் விஷயங்கள் வேறு மாதிரி இருந்திருக்கும்.

இருப்பினும் வங்காளதேச தொடரில் கம்பேக் கொடுப்பதற்கான கிளாஸ் மற்றும் அனுபவம் அவர்களிடம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த விஷயம் அமைதியாக கவனிக்க வேண்டிய ஒன்று. இது நீண்ட காலமாக இந்திய கிரிக்கெட்டில் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. அதாவது சில வீரர்கள் தங்களுடைய நட்சத்திர அந்தஸ்தின் காரணமாக சிறப்பு சலுகைகளுடன் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அது இறுதியில் மற்ற வீரர்களை அதிகமாக காயப்படுத்துகிறது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்