சிஎஸ்கே கோப்பையை வைத்து அரசியல் அச்சாரம் போடுகிறாரா ராயுடு?

சிஎஸ்கே வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்சி முதல் மந்திரிக்கு பரிசாக வழங்கப்பட்டது.;

Update:2023-06-09 08:46 IST

அமராவதி,

ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியிடம் ஐபிஎல் வெற்றிக்கோப்பை காண்பித்து சென்னை அணி நிர்வாகம் வாழ்த்து பெற்றது. ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி, அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோப்பையை காண்பித்து வாழ்த்து பெற்றது.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வெற்றிகோப்பைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் விஜயவாடாவில் உள்ள முதல்வர் முகாம் அலுவலகத்திற்கு சென்ற சிஎஸ்கே உரிமையாளர் ரூபா குருநாத், இறுதிப்போட்டியுடன் ஓய்வு பெற்ற சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு உள்ளிட்டோர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் கோப்பையை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது சிஎஸ்கே வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்சி முதல்வருக்கு பரிசாக வழங்கப்பட்டது. மென்மேலும் பல கோப்பைகளை சிஎஸ்கே வெல்ல வேண்டும் என ஜெகன்மோகன் வாழ்த்தினார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்