ஐபிஎல் மினி ஏலம்: வீரர்களை வாங்கும் போது அணி நிர்வாகங்கள் அறிந்திருக்க வேண்டிய 5 விதிகள்...!

ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது.

Update: 2022-12-23 04:23 GMT

கோப்புப்படம் 

கொச்சி,

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கழற்றிவிடப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது.

ஏலப்பட்டியலில் 273 இந்தியர், 132 வெளிநாட்டவர் என்று மொத்தம் 405 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் இருந்து அதிகபட்சமாக 30 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 87 வீரர்கள் ஏலத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த ஐபிஎல் ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ், சாம் கர்ரன் உள்ளிட்ட ஆல் ரவுண்டர்கள் அதிக விலைக்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த மினி ஏலத்தின் போது அணியின் உரிமையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான 5 விதிகளை பற்றி இங்கு பார்ப்போம்.

1. கடந்த ஆண்டு அணிகள் செலவு செய்யக்கூடிய தொகை இந்த ஆண்டு ரூ, 5 கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த தொகை அணியின் மொத்த தொகையுடன் ஏற்கனவே சேர்க்கப்பட்டுவிட்டது.

2. ஒரு அணி வைத்துள்ள மொத்த தொகையில் 75% தொகையை கண்டிப்பாக செலவு செய்ய வேண்டும்.

3. ரைட் டூ மேட்ச் கார்ட் இந்த ஏலத்தில் பயன்படுத்தப்படவில்லை.

4. ஒவ்வொரு அணியிலும் இந்திய வீரர்கள் குறைந்த பட்சம் 17 வீரர்கள் இடம் பெற வேண்டும். வெளிநாட்டு வீரர்கள் அதிகபட்சம் 8 வீரரகள் தேர்வு செய்யப்படலாம்.

5. எந்த ஒரு வீரரும் முதல் சுற்றில் விற்கப்படவில்லை என்றால் அந்த வீரரை மறுபடியும் ஏலத்தில் கொண்டுவர அணிகள் சொல்லலாம். 

Tags:    

மேலும் செய்திகள்