ஐ.பி.எல். தொடரின் பாதியிலேயே தோனி விலக வாய்ப்புள்ளது - டாம் மூடி கருத்து

நடப்பு ஐ.பி.எல். தொடரின் பாதியிலேயே தோனி விலக வாய்ப்புள்ளதாக டாம் மூடி தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-23 10:18 GMT

புதுடெல்லி,

ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதன் முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்களூருவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.

நடப்பு ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு ஒருநாள் முன்னதாக சென்னை அணியின் கேப்டனாக இருந்து வந்த தோனி பதவி விலகினார். அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரின் பாதியிலேயே தோனி விலகக்கூட வாய்ப்புள்ளதாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளரான டாம் மூடி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

தற்போது 42 வயது எட்டியுள்ள தோனி விக்கெட் கீப்பராக விளையாடி விட்டு பேட்ஸ்மேனாகவும் செயல்பட அவரது உடற்தகுதி ஒத்துழைக்காது என்பதை அவர் உணர்ந்திருக்கலாம். ஒருவேளை இந்த தொடரின் பாதியில் காயம், வலி அல்லது உடற்தகுதியில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அவர் அணியிலிருந்து விலகவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனவே தொடரின் பாதியில் புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய அழுத்தத்தை தரக்கூடாது என்பதற்காகவே ஆரம்பத்திலேயே கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகி இருக்கலாம்' என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்