ஐ.பி.எல்.: லக்னோவிற்கு எதிராக வரலாற்றை மாற்றி எழுதிய டெல்லி
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோவுக்கு எதிராக டெல்லி வெற்றி பெற்றது.
லக்னோ,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பதோனி அரை சதம் அடித்து அசத்தினார். டெல்லி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி 18.1 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜேக் பிரேசர் அரை சதம் அடித்தார்.
ஐ.பி.எல். வரலாற்றில் 160 ரன்களுக்கு மேல் அடித்த அனைத்து போட்டிகளிலும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிரணியை இலக்கை அடையவிடாமல் கட்டுப்படுத்தி வெற்றி கண்டிருந்தது. தற்போது இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அந்த வரலாற்றை மாற்றியுள்ளது.
இதற்கு முன் 13 போட்டிகளில் 160+ ரன்களை கட்டுப்படுத்தி தொடர்ச்சியாக வெற்றி நடை போட்டு வந்த லக்னோவின் பயணத்தை டெல்லி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.