ஐ.பி.எல். வரலாற்றில் 2-வது அதிகபட்ச ரன்கள்... வரலாறு படைத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் டெல்லிக்கு எதிராக கொல்கத்தா 272 ரன்கள் குவித்துள்ளது.

Update: 2024-04-03 16:27 GMT

image courtesy: twitter/@KKRiders

விசாகப்பட்டினம்,

ஐ.பி.எல். தொடரில் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வரும் 16-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதலே அதிரடி காட்டிய கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் டெல்லி பந்து வீச்சை பவுண்டரிக்கும் சிக்சருக்கும் பறக்க விட்டனர்.நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுனில் நரைன் 85 ரன்களும், ரகுவன்ஷி 54 ரன்களும், ரசல் 41 ரன்களும் குவித்தனர். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த 2-வது அணி என்ற வரலாற்று சாதனையை கொல்கத்தா படைத்துள்ளது. 

இதற்கு முன்னர் இதே சீசனில் மும்பைக்கு எதிராக சன்ரைசர்ஸ் அடித்த 277 ரன்களே ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ரன்களாக பதிவாகியுள்ளது.

அந்த பட்டியல்:-

1. சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 277 ரன்கள்

2. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- 272 ரன்கள்

3. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 263 ரன்கள்

4. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - 257 ரன்கள்

Tags:    

மேலும் செய்திகள்