ஐ.பி.எல்.2025: கொல்கத்தா - பஞ்சாப் அணிகளின் உரிமையாளர்கள் வாக்குவாதம்... என்ன நடந்தது..?

ஐபிஎல் நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது.

Update: 2024-08-01 11:11 GMT

மும்பை,

அடுத்த ஆண்டு (2025) ஐ.பி.எல்.தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதனையொட்டி ஐ.பி.எல். நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தக்க வைக்கப்படும் வீரர்களின் எண்ணிக்கை குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஐதராபாத், கேகேஆர், மும்பை உள்ளிட்ட அணிகளின் உரிமையாளர்கள் குறைந்தது 6 முதல் 7 வீரர்களை தக்க வைக்கும் அளவிற்கு மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

மறுபக்கம் டெல்லி, பஞ்சாப், லக்னோ உள்ளிட்ட அணிகளின் உரிமையாளர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஒரு கட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக் கான் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா இருவரும் காரசாரமாக விவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. குறிப்பாக இளம் வீரர்களை தேடி பிடித்து பயிற்சியளித்து தயார் செய்து மெகா ஏலத்தில் அவர்களை விடுவது தங்களுக்கு சிக்கல் என்று கேகேஆர் அணி தரப்பில் ஷாருக் கான் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்