ஐ.பி.எல்.2024; ஐதராபாத் அணிக்கு பின்னடைவு...தொடரில் இருந்து விலகும் முன்னணி வீரர் - வெளியான தகவல்
ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.;
கொழும்பு,
ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த இலங்கையை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்கா தொடரில் இருந்து முழுமையாக விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வங்காளதேசத்திற்கு எதிரான தொடரில் ஆடி வந்த அவர் தற்போது இடது குதிகால் பகுதியில் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு அவர் நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.