ஐபிஎல் 2024 : பயிற்சியை தொடங்கிய தோனி..! வைரலாகும் வீடியோ
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது.
ராஞ்சி,
10 அணிகள் பங்கேற்கும் 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதையொட்டி 10 அணிகளிலும் கழற்றி விடப்பட்ட மற்றும் விலகிய வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை எடுப்பதற்கான ஏலம் துபாயில் கடந்த மாதம் 19-ம் தேதி நடந்தது.
அந்த ஏலத்தில் பங்கேற்ற அணிகள் போட்டி போட்டு தங்களது அணிக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்தன.
17-வது ஐ.பி.எல். தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் இம்முறையும் கோப்பையை வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில் இதுவரையில் ஓய்வில் இருந்து வந்த தோனி தற்போது ராஞ்சியில் பயிற்சியை தொடங்கி உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
42 வயதாகும் தோனி இந்த சீசனுடன் தனது ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.