ஐ.பி.எல்; குறைந்த இன்னிங்சில் 200 சிக்சர்கள்...தோனி, ரோகித், கோலியை முந்தி சாதனை படைத்த சாம்சன்

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

Update: 2024-05-08 14:40 GMT

Image Courtesy: X (Twitter)

டெல்லி,

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் பொரேல் 65 ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 86 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ், முகேஷ் குமார், கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 4 ஓவரில் 25 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஐ.பி.எல் தொடரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அவர் இந்த போட்டியில் 6 சிக்சர்களை விளாசினார். இதன் மூலம் ஐ.பி.எல் தொடரில் குறைந்த இன்னிங்சில் 200 சிக்சர்களை விளாசிய இந்திய வீரர் என்ற வராலாற்று சாதனையை சாம்சன் படைத்துள்ளார்.

சாம்சன் 159 இன்னிங்சில் 200 சிக்சர்கள் அடித்துள்ளார். இதுவரை முதல் இடத்தில் இருந்த தோனி (165 இன்னிங்ஸ்) 2ம் இடத்திற்கு சரிந்துள்ளார். இந்த பட்டியலில் 3ம் இடத்தில் விராட் கோலி (180 இன்னிங்ஸ்), 4ம் இடத்தில் ரோகித் சர்மா (185 இன்னிங்ஸ்), 5ம் இடத்தில் சுரேஷ் ரெய்னா (193 இன்னிங்ஸ்) உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்