சர்வதேச டி20 கிரிக்கெட்; கேப்டனாக அதிக வெற்றிகள் - புதிய வரலாற்று சாதனை படைத்த பாபர் அசாம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது.

Update: 2024-05-13 03:40 GMT

கோப்புப்படம்

டப்ளின்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவது டி20 போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 194 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் 16.5 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 195 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அது என்னவெனில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்ற வீரர்கள் பட்டியலில் உகாண்டாவின் பிரையன் மசாபாவை பின்னுக்கு தள்ளி பாபர் அசாம் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றிகள்;

பாபர் அசாம் - பாகிஸ்தான் - 45

பிரையன் மசாபா - உகாண்டா -44

இயான் மோர்கன் - இங்கிலாந்து - 42

அஸ்கர் ஆப்கான் - ஆப்கானிஸ்தான் - 42

எம்.எஸ்.தோனி - இந்தியா - 41

ரோகித் சர்மா - இந்தியா - 41

ஆரோன் பின்ச் - ஆஸ்திரேலியா - ௪௦



Tags:    

மேலும் செய்திகள்