உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு - சாம்சனுக்கு இடம் கிடைக்குமா...?

உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது.

Update: 2023-09-05 03:30 GMT

Image Courtesy: AFP

புதுடெல்லி,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோத உள்ளன.

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் எதிர்கொள்கிறது. உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

உலகக்கோப்பை தொடருக்கான முதன்மை அணிகளை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அறிவித்துள்ளன. உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள் யார்? என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இன்று மதியம் 1.30 மணிக்கு இலங்கையின் கண்டியில் இந்த அறிவிப்பு வெளியாகும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்