அதுமட்டும் நடந்திருந்தா கதை வேறு மாதிரி இருந்திருக்கும் - பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம்
உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது.
கொல்கத்தா,
உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்தது. இந்த ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் அளித்த பேட்டியில் கூறியதாவது,
ஆம். எங்களுடைய செயல்பாடுகளால் மிகவும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளோம். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் வென்றிருந்தால் கதை வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால் நாங்கள் பேட்டிங், பவுலிங், பீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் தவறு செய்தோம்.
இப்போட்டியில் நாங்கள் 20 - 30 ரன்கள் எக்ஸ்ட்ரா வழங்கினோம். பவுலர்கள் சுமாரான பந்துகளை வீசினார்கள். சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்கவில்லை. அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
பொதுவாகவே மிடில் ஓவர்களில் உங்களுடைய சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்காமல் போனால் நீங்கள் கண்டிப்பாக தடுமாறுவீர்கள். இந்த சூழ்நிலையில் நாங்கள் ஒன்றாக உட்கார்ந்து பேச வேண்டும்.
இத்தொடரில் கிடைத்த நேர்மறையான பாடங்களையும் தவறுகளையும் நாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். கேப்டன்ஷிப் பொறுப்பில் என்னுடைய அனுபவத்தில் முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்பட விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.