டி20 பேட்டிங் தரவரிசை: ரிஸ்வானை நெருங்கும் சூர்யகுமார் யாதவ்... முதலிடம் பிடிப்பாரா?

டாப்10' வரிசையில் இந்திய வீரர்களில் சூர்ய குமார் யாதவ் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

Update: 2022-10-13 14:54 GMT

Image Courtesy: PTI/ AFP 

துபாய்,

ஆண்களுக்கான ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 838 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் உள்ள பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கும் அவருக்கும் 15 புள்ளிகளே வித்தியாசம் இருக்கிறது.

ரிஸ்வான் 853 புள்ளிகளுடன் இருக்கிறார். 32 வயதான சூர்யகுமார் யாதவ் சமீபகாலமாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தென் ஆப்பிரிக்கா தொடரில் அவர்தான் அதிக ரன் குவித்து இருந்தார். 'டாப்10' வரிசையில் இந்திய வீரர்களில் சூர்ய குமார் யாதவ் மட்டுமே இடம் பெற்றுள்ளார். வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் ரிஸ்வானை விட சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் சூர்யகுமார் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைக்கலாம்.

சூர்யகுமாரை தவிர இந்த பட்டியலில் இந்திய வீரர்கள் லோகேஷ் ராகுல் 13-வது இடத்திலும் (606 புள்ளிகள்), முன்னாள் கேப்டன் விராட் கோலி 14-வது இடத்திலும் (605 புள்ளி), கேப்டன் ரோகித் சர்மா 16-வது இடத்திலும் (604 புள்ளி) உள்ளனர்.

பாபர் அசாம் (பாகிஸ்தான்) மார்க்ராம் (தென் ஆப்பிரிக்கா), கான்வாய் (நியூசிலாந்து), ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா), நிஷங்கா (இலங்கை), முகமது வாசிம் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்), குயின்டன் டி காக் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் 3 முதல் 10-வது இடங்களில் உள்ளனர். பந்து வீச்சை பொறுத்தவரை 'டாப்10'ல் இந்திய வீரர்கள் யாரும் இல்லை. புவனேஸ்வர் குமார் 638 புள்ளிகளுடன் 13-வது இடத்தில் உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்