ஐசிசி விருது 2023; சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி விருதை வென்ற பேட் கம்மின்ஸ்

ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி விருது வழங்கப்படுகிறது.;

Update:2024-01-25 18:52 IST
ஐசிசி விருது 2023; சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி விருதை வென்ற பேட் கம்மின்ஸ்

image courtesy; ICC

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரருக்கு வழங்கப்படும் சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்திருந்தது.

அதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தலா 2 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். அதன்படி இந்திய அணியை சேர்ந்த விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இவர்களில் ஆண்டின் சிறந்த வீரராக பேட் கம்மின்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சிறந்த வீரருக்கு வழங்கப்படும் சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி விருது வழங்கப்பட உள்ளது.

 

இவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை இரண்டிலும் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 2 தொடர்களிலும் சிறப்பாக செயல்பட்டதால் இவர் இந்த விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்