மீதமிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாடுவாரா..? - ராகுல் டிராவிட் அளித்த பதில்

விராட் கோலியின் வருகையை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Update: 2024-02-05 17:47 GMT

விசாகப்பட்டினம்,

ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, அடுத்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியை வென்று தொடரை சமன் செய்திருக்கிறது.

இதனிடையே இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்ட, முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து, தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிக் கொண்டார். மேலும் ஒரு பின்னடைவாக இந்திய அணியின் அனுபவ வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல்.ராகுல் ஆகியோரும் காயத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம் பெறவில்லை.

இதில் ஜடேஜா ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதே சமயத்தில் கே.எல். ராகுல் மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்திய அணிகள் இடம் பெறுவாரா? என்பதும் கேள்வியாக இருக்கிறது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு விராட் கோலி வருவது இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. மேலும் விராட் கோலியின் வருகையை இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் பெரிதும் ஆவலாக எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

அதே சமயத்தில் இரண்டாவது குழந்தைக்கான எதிர்பார்ப்பில் இருக்கின்ற காரணத்தினால் விராட் கோலி தனது மனைவியுடன் நேரத்தை செலவிட விரும்புகிறார் என்று ஏபி.டிவில்லியர்ஸ் கூறியிருந்தார். இதன் காரணமாக விராட் கோலி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா? என்கின்ற சந்தேகம் நிலவி வருகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், "இதுகுறித்து நீங்கள் தேர்வுக்குழுவை கேட்பதுதான் சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு அணியை தேர்வு செய்யும் அவர்கள்தான் இதற்கான பதிலை சொல்ல வேண்டும். அடுத்த சில நாட்களில் மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன். மேலும் நாங்களும் விராட் கோலியை தொடர்பு கொண்டு, இங்கிலாந்துக்கு எதிராக மீதமிருக்கும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியுமா என நாங்கள் விசாரிப்போம்" என்று அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்