அதிக முறை ஐபிஎல் கோப்பை வென்ற வீரர்கள் - தோனியின் சாதனையை முறியடித்த ஹர்திக் பாண்டியா

இந்த பட்டியலில் ரோகித் சர்மா 6 கோப்பைகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

Update: 2022-05-30 08:35 GMT

Image Courtesy : Twitter @hardikpandya7

அகமதாபாத்,

மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பிரம்மாண்ட இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

அறிமுக அணியான குஜராத்தை சிறப்பாக வழிநடித்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து அசத்தியுள்ளார். முதல் அணியாக பிளே ஆப் மற்றும் இறுதி போட்டிக்குள் நுழைந்த குஜராத் அணி பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை தட்டி சென்றுள்ளது.

இதன் மூலம் ஹர்திக் பாண்டியா தோனியின் தனித்துவமான சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். அதாவது அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்ற வீரர்கள் பட்டியலில் தோனியை (4 முறை) முந்தியுள்ளார் ஹர்திக் பாண்டியா முந்தியுள்ளார்.

மும்பை அணி 2015, 2017, 2019, மற்றும் 2020 ஆம் ஆண்டு கோப்பை வென்ற சமயத்தில் அந்த அணியில் ஹர்திக் பாண்டியா இடம் பெற்று இருந்தார். இந்த நிலையில் நேற்று கோப்பை வென்றதன் மூலம் 5-வது முறையாக கோப்பை வென்று தோனியின் சாதனையை பாண்டியா முறியடித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியாவை தவிர இந்த பட்டியலில் 5 கோப்பைகளுடன் அம்பதி ராயுடு உள்ளார். அவர் மும்பை இந்தியன்ஸ் (3) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (2) ஆகிய இரு வெவ்வேறு அணிகளுக்காக கோப்பைகளை வென்றுள்ளார். மும்பை அணியின் மற்றொரு வீரர் கெய்ரோன் பொல்லார்டு மும்பை அணி கோப்பை வென்ற 5 ஐபிஎல் வெற்றிகளிலும் அணியின் ஒரு பகுதியாக இருந்துள்ளார்.

இந்த பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 6 கோப்பைகளுடன் முதல் இடத்தில உள்ளார். அவர் மும்பை அணிக்காக 5 முறையும் டெக்கான் சார்ஜர்ஸுக்காக ஒருமுறை என 6 முறை ஐபிஎல் கோப்பை வென்ற அணியில் இருந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்