"கேப்டன் பதவி சிறப்பான உணர்வு ஆனால் நல்ல சூழ்நிலையில் வரவில்லை " - ரிஷப் பண்ட் கருத்து

கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன் என ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.;

Update:2022-06-09 15:55 IST

Image Courtesy : AFP 

புதுடெல்லி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறுகிறது.

நேற்று வரை இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டு இருந்தார். பின்னர் காயம் காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து விலகுவதாகுவும் அவருக்கு பதில் இந்திய அணியை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் வழிநடத்துவார் எனவும் நேற்று மாலை அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து ரிஷப் பண்ட் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

கேப்டன் பதவி சிறப்பான உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் மிகவும் நல்ல சூழ்நிலையில் வரவில்லை. ஆனால் அதே நேரத்தில் கேப்டன் பதவி வகிப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்திய அணியை வழி நடத்த வாய்ப்பு அளித்ததற்காக கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

ஐ.பி.எல். போட்டியில் தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டுள்ள பாடம் வரும் நாட்களில் எனக்கு உதவும் என்று கருதுகிறேன். கேப்டன் பதவியில் நான் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன். எனது கிரிக்கெட் ஏற்றம், இறக்கத்தில் உறுதுணையாக இருந்த அனைத்து நலம் விரும்பிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

ராகுல் தொடக்க வீரராக ஆடி இருந்ததால் பேட்டிங் வரிசையில் அதிரடி மாற்றம் இருக்காது. எங்களிடம் அதிகமான தொடக்க வீரர்கள் இல்லை. ஒரு அணியாக நாங்கள் அடைய விரும்பும் இலக்கை பற்றி ஆலோசித்துள்ளோம்.

இவ்வாறு ரிஷப்பண்ட் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்