இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு கிளென் மெக்ராத் புகழாரம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் க்ளென் மெக்ராத், ஹர்திக் பாண்டியாவை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.;

Update:2022-08-04 20:58 IST

சிட்னி,

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, முதுகுவலியால் அவதிபட்டு வந்த நிலையில், கடந்த வருடம் இங்கிலாந்து நாட்டில் அறுவைசிகிச்சை செய்துகொண்டார். அதன் பிறகு ஒரு வருடமாக எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்குபெறாமல் ஓய்வில் இருந்த ஹர்திக் பாண்டியா ஐ.பி.எல். தொடரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தும் அந்த அணிக்கு ஐ.பி.எல். கோப்பையை கொடுத்தார். மேலும் தற்போது பந்துவீச்சிலும் விக்கெட்டுகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் க்ளென் மெக்ராத், ஹர்திக் பாண்டியாவை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், கிரிக்கெட் மிகவும் நம்பிக்கையான விளையாட்டு. ஹர்திக் மிகவும் நம்பிக்கையான வீரர். அவர் நன்றாக பந்துவீசினால், அது அவரது பேட்டிங்கில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

அவர் இரண்டு வீரர்களின் ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். அவர் ஒரு ஆடம்பரம். ஹர்திக் பாண்டியா ஒரு நல்ல, பந்துவீச்சாளர் மற்றும் சக்திவாய்ந்த பேட்ஸ்மேனாகவும் உள்ளார். அவரிடம் நல்ல விளையாட்டுத் திட்டம் உள்ளது" என்று மெக்ராத் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்